Posts

ரயில்வேயில் பட்டதாரிகளுக்கு வேலை; 5,810 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?

Image
இந்தியன் ரெயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.; ரயில்வேயில் பட்டதாரிகளுக்கு வேலை;   5,810 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? இந்திய ரெயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர், டிக்கெட் கிளர்க், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவும் தொடங்கியுள்ளது. விண்ணப்பிப்பது எப்படி ? கடைசி தேதி உள்ளிட்ட விவரங்கள் வருமாறு: பணியிடங்கள் :டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரெயில் மேலாளர், ஜூனியர் அக்கவுண்ட் அஸிஸ்டண்ட், டைப்பிஸ்ட், சீனியர் கிளர்க் டைப்பிஸ்ட் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 5,810 காலிப்பணியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி: ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18 வயது முதல் 33 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகள் வரையும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள் வரையும் வயது தளர்வு வழங்கப்படுகிறது. தேர்வு முறை...

Wauf சட்டம்

Image
  வக்ஃபு திருத்தச் சட்டம்: சட்டத்தின் பெயரால் இஸ்லாமியர்களின் சொத்துகளைக் கைப்பற்றுவதற்கான  சதிமுயற்சி!  பாஜக அரசின் பெரும்பான்மைவாத ஃபாசிசத்தைக் கண்டித்து ஏப்ரல்- 08 அன்று அனைத்து மாவட்டங்களிலும்  ஆர்ப்பாட்டம்!  அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான வக்ஃபு சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை ! ------------------------------------------------------------------- இஸ்லாமிய அமைப்புகளும் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த போதும் அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக வஃக்பு திருத்தச் சட்டத்தைப் பாசிச பாஜக அரசு  நிறைவேற்றியுள்ளது. நாடாளுமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நள்ளிரவு இரண்டு மணிக்கு மேல் அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.  இது சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை அடிப்படையாகக்கொண்ட மிகவும்  அப்பட்டமான ஃபாசிசத் தாக்குதலாகும். அரசமைப்புச் சட்டத்துக்கும் தேசிய ஒருமைபாட்டுக்கும் எதிரான வக்ஃபு திருத்தச் சட்டத்தைக் கண்ட...

Rti fine

Image
ஆர்டிஐ-யில் பதில் தராத துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கு அபராதம் - தகவல் ஆணையம் அதிரடி - RTI FINE தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் தராத துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் இருவரும் ரூ.1,000 அபராதம் செலுத்த தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மதுரை: கிராம நிர்வாக அலுவலர்களும்கூட பொது தகவல் அலுவலர்கள்தான் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கிய கூறு என்றாலும் அதனை தமிழ்நாடு தகவல் ஆணையமே மறுத்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக சமூக ஆர்வலர் வருத்தம் தெரிவிக்கிறார்.மதுரையைச் சேர்ந்த 'இந்தியன் குரல் உதவி மையம்' என்ற அமைப்பைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் என்.ஜி. மோகன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் நாளிட்ட கடிதத்தில், மதுரை மாவட்டம் முள்ளிப்பள்ளம் கிராம நிர்வாக அலுவலருக்கும், மேற்கண்ட அதே தேதியில் மண்ணாடி மங்கலம் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக 11 தகவல்களை கேட்டிருந்தார்.மேற்கண்ட இருவரும் தகவல் வழங்காத நிலையில் மேல் முறையீடு செய்திருந்தார். ...

R nallakannu birthday

Image
இரா. நல்லகண்ணு அவர்களுக்கு 100 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்  இரா. நல்லகண்ணு (R. Nallakannu, பிறப்பு: 26 திசம்பர் 1925) சுமார் 25 ஆண்டுகள் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 13 ஆண்டுகாலம் இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகவும் இருந்துள்ளார். தப்போது மத்திய குழு உறுப்பினர், தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவராக இருக்கிறார்.[] தகைசால் தமிழர் இரா. நல்லகண்ணு மத்திய கமிட்டி உறுப்பினர் தனிப்பட்ட விவரங்கள் பிறப்பு:26 திசம்பர் 1925 (அகவை 100) சிறீவைகுண்டம், பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா அரசியல் கட்சி; இந்திய பொதுவுடமைக் கட்சி வாழிடம்(s): சென்னை, தமிழ்நாடு இந்தியா வேலை; அரசியல்வாதி வாழ்க்கை வரலாறு‍ பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டம், மாவட்டப் பிரிவினைக்குப் பின்பு, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 26 திசம்பர், 1925 ஆம் ஆண்டு பிறந்தார். நல்லகண்ணு 18 ஆவது வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இரண்டாயிரம் மூட்டை நெல் வைத்திருப்பதைக் கண்டுபிடித்து ஜனசக்தி பத்திரிகையில் எழுதினார். அதைப...

Ambethkar இழிவு

Image
 #அமித்ஷாவின்_வெறுப்பு_பேச்சு: -------------------------------------------------- புரட்சியாளர் அம்பேத்கர் மீதான வெறுப்பை வெளிப்படுத்தினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!  உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் சங்பரிவார்களின் முகத்திரை கிழிந்தது! நாட்டு மக்களிடம் வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்!  -------------------------------------------------- அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆவது ஆண்டை நினைவுகூர்ந்திடும் வகையில் மாநிலங்களவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், காங்கிரசை விமர்சிக்கும் பெயரில் புரட்சியாளர் அம்பேத்கர் மீதான தனது வெறுப்பை வெளிப்படுத்தினார். இதன்மூலம் சங்பரிவார்களின் முகத்திரை கிழிந்துள்ளது. அவர்களின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது.    அமித்ஷா அவர்கள் பேசும்போது,   "அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்..என்று சொல்வதே ஃபேஷன் ஆகிவிட்டது. அதற்குப் பதிலாக கடவுளின் பெயரைச் சொன்னால் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்”  என்று எதிர்க்கட்சியினரைக் கேலி செய்து ...

ஒரே நாடு ஒரே தேர்தல்

Image
 * ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை முற்றாகத் திரும்பப் பெற வேண்டும்...* *ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளை சிதைக்கும் மிக மோசமான உள்நோக்கம் கொண்டதாகும்...* *மாநிலம் சார்ந்த உணர்வுகளை நசுக்குவதும், மாநில உரிமைகளை பறிப்பதும், மாநில கட்சிகளை மெல்ல மெல்ல ஒழிப்பதும், இன்றைய நாடாளுமன்ற ஜனநாயக முறையை ஒழித்து அதிபர் ஆட்சி முறைக்கு மாற்றுவதும் அதன் வழி நாட்டை அரச மதம் கொண்டதொரு மதச் சார்புள்ள தேசமாக கட்டமைப்பதும் தான் பாஜகவினர் இறுதி நோக்கமாகும்...* *ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததனால் அதனை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பி தற்போதைக்கு ஆர போட்டுள்ளனர். விசிக சார்பில் நமது எதிர்ப்பை பதிவு செய்ய வாய்ப்பு கேட்டும் கிட்டவில்லை. மிகுந்த வேதனை அளிக்கிறது. இதனை முற்றாகத் திரும்பப் பெறவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்...* *அரசமைப்புச் சட்டத்துக்கு வேட்டுவைக்கும் பாஜகவின் முயற்சியை விசிக சார்பில் மிக வன்மையாக கண்டிக்கிறோம்...* *தொல்.திருமாவளவன்,* நிறுவனர் - தலைவர்,விசிக, நாடாளுமன்ற உறுப்பினர்,  சிதம்பரம்....

கட்ச தீவு சீமான்

Image
கட்சத்தீவு  மீட்பது தான் தமிழ் நாட்டிற்கு பாதுகாப்பு : சீமான்.... இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகவிடம், இலங்கை இராணுவத்தால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமென பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் ஆகியோர் வலியுறுத்தியுள்ள போதும், அவர்களில் யாருமே தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை மீட்பது குறித்து வாய் திறவாதது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. கச்சத்தீவை மீட்காமல் எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தினாலும், என்ன தீர்வை எட்டினாலும், அவை ஒருபோதும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு நிலைத்த பயனோ, பாதுகாப்போ தரப்போவதில்லை. தமிழின முன்னோர்களான இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்ட 285 ஏக்கர் கச்சத்தீவானது வரலாறு அடிப்படையிலும், வாழ்வியல் அடிப்படையிலும் முழுக்க முழுக்க தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலப்பகுதியாகும். கடந்த 1974 ஆம் ஆண்டு அம்மையார் இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் இந்தியா – இலங்கை இடையே ஏற்பட்ட சட்டவிரோத ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்க...