ரயில்வேயில் பட்டதாரிகளுக்கு வேலை; 5,810 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?
இந்தியன் ரெயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.; ரயில்வேயில் பட்டதாரிகளுக்கு வேலை; 5,810 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? இந்திய ரெயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர், டிக்கெட் கிளர்க், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவும் தொடங்கியுள்ளது. விண்ணப்பிப்பது எப்படி ? கடைசி தேதி உள்ளிட்ட விவரங்கள் வருமாறு: பணியிடங்கள் :டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரெயில் மேலாளர், ஜூனியர் அக்கவுண்ட் அஸிஸ்டண்ட், டைப்பிஸ்ட், சீனியர் கிளர்க் டைப்பிஸ்ட் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 5,810 காலிப்பணியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி: ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18 வயது முதல் 33 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகள் வரையும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள் வரையும் வயது தளர்வு வழங்கப்படுகிறது. தேர்வு முறை...