Posts

Showing posts from December, 2024

R nallakannu birthday

Image
இரா. நல்லகண்ணு அவர்களுக்கு 100 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்  இரா. நல்லகண்ணு (R. Nallakannu, பிறப்பு: 26 திசம்பர் 1925) சுமார் 25 ஆண்டுகள் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 13 ஆண்டுகாலம் இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகவும் இருந்துள்ளார். தப்போது மத்திய குழு உறுப்பினர், தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவராக இருக்கிறார்.[] தகைசால் தமிழர் இரா. நல்லகண்ணு மத்திய கமிட்டி உறுப்பினர் தனிப்பட்ட விவரங்கள் பிறப்பு:26 திசம்பர் 1925 (அகவை 100) சிறீவைகுண்டம், பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா அரசியல் கட்சி; இந்திய பொதுவுடமைக் கட்சி வாழிடம்(s): சென்னை, தமிழ்நாடு இந்தியா வேலை; அரசியல்வாதி வாழ்க்கை வரலாறு‍ பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டம், மாவட்டப் பிரிவினைக்குப் பின்பு, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 26 திசம்பர், 1925 ஆம் ஆண்டு பிறந்தார். நல்லகண்ணு 18 ஆவது வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இரண்டாயிரம் மூட்டை நெல் வைத்திருப்பதைக் கண்டுபிடித்து ஜனசக்தி பத்திரிகையில் எழுதினார். அதைப...

Ambethkar இழிவு

Image
 #அமித்ஷாவின்_வெறுப்பு_பேச்சு: -------------------------------------------------- புரட்சியாளர் அம்பேத்கர் மீதான வெறுப்பை வெளிப்படுத்தினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!  உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் சங்பரிவார்களின் முகத்திரை கிழிந்தது! நாட்டு மக்களிடம் வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்!  -------------------------------------------------- அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆவது ஆண்டை நினைவுகூர்ந்திடும் வகையில் மாநிலங்களவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், காங்கிரசை விமர்சிக்கும் பெயரில் புரட்சியாளர் அம்பேத்கர் மீதான தனது வெறுப்பை வெளிப்படுத்தினார். இதன்மூலம் சங்பரிவார்களின் முகத்திரை கிழிந்துள்ளது. அவர்களின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது.    அமித்ஷா அவர்கள் பேசும்போது,   "அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்..என்று சொல்வதே ஃபேஷன் ஆகிவிட்டது. அதற்குப் பதிலாக கடவுளின் பெயரைச் சொன்னால் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்”  என்று எதிர்க்கட்சியினரைக் கேலி செய்து ...

ஒரே நாடு ஒரே தேர்தல்

Image
 * ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை முற்றாகத் திரும்பப் பெற வேண்டும்...* *ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளை சிதைக்கும் மிக மோசமான உள்நோக்கம் கொண்டதாகும்...* *மாநிலம் சார்ந்த உணர்வுகளை நசுக்குவதும், மாநில உரிமைகளை பறிப்பதும், மாநில கட்சிகளை மெல்ல மெல்ல ஒழிப்பதும், இன்றைய நாடாளுமன்ற ஜனநாயக முறையை ஒழித்து அதிபர் ஆட்சி முறைக்கு மாற்றுவதும் அதன் வழி நாட்டை அரச மதம் கொண்டதொரு மதச் சார்புள்ள தேசமாக கட்டமைப்பதும் தான் பாஜகவினர் இறுதி நோக்கமாகும்...* *ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததனால் அதனை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பி தற்போதைக்கு ஆர போட்டுள்ளனர். விசிக சார்பில் நமது எதிர்ப்பை பதிவு செய்ய வாய்ப்பு கேட்டும் கிட்டவில்லை. மிகுந்த வேதனை அளிக்கிறது. இதனை முற்றாகத் திரும்பப் பெறவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்...* *அரசமைப்புச் சட்டத்துக்கு வேட்டுவைக்கும் பாஜகவின் முயற்சியை விசிக சார்பில் மிக வன்மையாக கண்டிக்கிறோம்...* *தொல்.திருமாவளவன்,* நிறுவனர் - தலைவர்,விசிக, நாடாளுமன்ற உறுப்பினர்,  சிதம்பரம்....

கட்ச தீவு சீமான்

Image
கட்சத்தீவு  மீட்பது தான் தமிழ் நாட்டிற்கு பாதுகாப்பு : சீமான்.... இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகவிடம், இலங்கை இராணுவத்தால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமென பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் ஆகியோர் வலியுறுத்தியுள்ள போதும், அவர்களில் யாருமே தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை மீட்பது குறித்து வாய் திறவாதது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. கச்சத்தீவை மீட்காமல் எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தினாலும், என்ன தீர்வை எட்டினாலும், அவை ஒருபோதும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு நிலைத்த பயனோ, பாதுகாப்போ தரப்போவதில்லை. தமிழின முன்னோர்களான இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்ட 285 ஏக்கர் கச்சத்தீவானது வரலாறு அடிப்படையிலும், வாழ்வியல் அடிப்படையிலும் முழுக்க முழுக்க தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலப்பகுதியாகும். கடந்த 1974 ஆம் ஆண்டு அம்மையார் இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் இந்தியா – இலங்கை இடையே ஏற்பட்ட சட்டவிரோத ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்க...

Eps vs ops issue

Image
எல்லாத்தையும் ’மேல’ இருக்கவங்க பாத்துப்பாங்க.. பாஜக உதவியை நாடும் பன்னீர்செல்வம்! எடப்பாடிக்கு செக்! சென்னை: சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியிலிருந்து வெளியேற்றியது, அதிமுகவின் பொது செயலாளர் ஆனது என எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமான நிகழ்வுகள் அதிமுகவில் அரங்கேறியிருக்கிறது. இந்நிலையில் கட்சியின் அடையாளமான இரட்டை இலை சின்னம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுகள் அவரை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் எடப்பாடிக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் இது தொடர்பாக பாஜக உதவியை நாட உள்ளதாகவும், இதற்காக அவர் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்றிருக்கிறார். இந்த நிலையில் கட்சி சின்னம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் ஓபிஎஸ், சசிகலா தரப...

விசிக கொடி கம்பம்

Image
  மதுரை விசிக கொடிக்கம்ப விவகாரம்.. வருவாய்த் துறை அதிகாரிகள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் மதுரை: மதுரை வெளிச்சநத்தம் கிராமத்தில் 45 அடி உயரக் கொடிக் கம்பத்தில் விசிக கொடியேற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் வருவாய் ஆய்வாளர் உட்பட 3 பேரை மதுரை மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்திருந்தார். அதைக் கண்டித்து வருவாய்த் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த நிலையில், சஸ்பெண்ட் உத்தரவை மாவட்ட ஆட்சியர் வாபஸ் பெற்று இருக்கிறார். கடந்த 1996ல் மதுரை மாவட்டத்தில் உள்ள வெளிச்சநத்தம் கிராமத்தில் விசிக சார்பில் 25 அடி உயரத்தில் கொடிக் கம்பம் நிறுவப்பட்டது. அதை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏற்றி வைத்திருந்தார்.. கொடிக் கம்பம்: அந்த கொடிக் கம்பத்தை 25 அடியில் இருந்து சமீபத்தில் 45 அடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும், இதற்கு மாவட்ட நிர்வாகத்தில் இருந்து உரிய அனுமதி பெறவில்லை. இந்த கொடிக் கம்பம் குறித்த தகவல் கிடைத்தவுடன் இது குறித்து விசாரிக்க வருவாய்த் துறை அதிகாரிகள் அங்குச் சென்றுள்ளனர். 25 அடி உயரக் கூடிய கொடிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் 45 அடி கொடிக் கம்பத்திற்கு அனும...

அணு கனிமம் வேல்முருகன்

Image
  கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கத்தை அமைக்க பாசிச மோடி அரசு திட்டம் : கார்ப்பரேட் கும்பலுக்கு சேவகம் செய்யும் ஒன்றிய அரசின் நாசக்காரத் திட்டங்களை தடுத்து நிறுத்துக! மதுரை அரிட்டாபட்டியில் வேதாந்தாவின் டங்ஸ்டன் சுரங்கத்தை அமைக்க விடமாட்டோம் என தமிழ்நாடு அரசு உறுதியாக தெரிவித்திருப்பது வரவேற்கதக்கது; பாராட்டுக்குரியது. குறிப்பாக, முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் அமையாது; இதையும் தாண்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் வந்தால் முதல்வர் பதவியில் இருக்கமாட்டேன் என்று தமிழ்நாடு மாண்புமிகு முதல்வர் அவர்கள் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க பாசிச மோடி அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த நாசக்காரத் திட்டத்திற்காக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த முயன்றது. பின்னர், மக்கள் எதிர்ப்பினால் அக்கருத்துக் கேட்பு கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரையடுத்த கீழ்மிடாலம், மிடாலம், இணையம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய க...

ஒம்கார் பாலாஜி

Image
  அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜிக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்.. கோவை நீதிமன்றம் அதிரடி உத்தரவு! கோவை: பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஒம்கார் பாலாஜியை வரும் 28 ஆம் தேதி வரை, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நேற்று கைது செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி கோவை அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணைக்குப் பின் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஓம்கார் பாலாஜியை போலீசார் ஆஜர்படுத்தினர். ஓம்கார் பாலாஜியை 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையில் உள்ள ஈஷா மையம் குறித்தும், அந்த மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் குறித்தும் நக்கீரன் இதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. இதனால், ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை வகித...

December 96 Ambethkar last

Image
அம்பேத்காரின் இறுதி நாள்  - டிசம்பர் 6  என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே, வணக்கம்.  திசம்பர்-06 புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாள். அவர் காலமாகி அறுபத்தெட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.  1956 திசம்பர் 06 அன்று புது தில்லி, அலிப்பூர் சாலையில் அவர் தங்கியிருந்த இல்லத்தில், நீரிழிவு மற்றும் குருதி அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு கடுமையாக உடல் நலிவுற்றுக் காலமானார். அப்போது அவர் சட்ட அமைச்சர் பதவியைத் துறந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.  அவர் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த 'இந்துச் சட்ட மசோதாவை' நிறைவேற்ற விடாமல் தோல்வியுறச் செய்த சனாதனச் சக்திகளை எதிர்த்து, 1951 செப்டம்பர் 27 அன்று தனது சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் பதவியை உதறி எறிந்தார்.  அதன்பின்னர், தனது இறுதி மூச்சுவரையில் அவர் தில்லி இல்லத்தில் தங்கியிருந்தவாறே, பௌத்தம் தழுவியது, "புத்தரும் அவரது தம்மமும்" என்கிற வரலாற்றைப் புரட்டும் வல்லமை வாய்ந்த நூலினை வடித்தது உள்ளிட்ட அனைத்து அரும்பெரும் சாதனைகளையும் படைத்தார். 1935 ஆம் ஆண்டு மராட்டிய மாநிலம், நாசிக் மாவட்டம், ய...

பொன்முடி சேறு

Image
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்த மக்கள்.. கலெக்டரையும் விடலையே.. விழுப்புரத்தில் பரபரப்பு விழுப்புரம் :  பெஞ்சல் புயலால் பெய்த கனமழையின் காரணமாக விழுப்புரம் மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வரும் சூழலில் இன்று வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், முன்னாள் எம்பியுமான கவுதம் சிகாமணி, கலெக்டர் பழனி ஆகியோர் மீது மக்கள் சேற்றை வாரி இறைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயலால் சென்னை உள்பட வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த புயல் கரையை கடந்தாலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.  வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகப்பட்சமாக 51 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், திண்டிவனம் உள்பட பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மரக்காணம், கோலியனூர், நன்னாட்டம்பாயைம், பஞ்சமா தேவி, கல்பட்டு, பிடாகம், குச்சிப்பாளையம், பேரங்கியூர், நன்னாடு, பெரும்பாக்கம், காணை, மாம்பலப்பட்டு, காங்கேயனூர், செஞ்சி, ...