Wauf சட்டம்
வக்ஃபு திருத்தச் சட்டம்: சட்டத்தின் பெயரால் இஸ்லாமியர்களின் சொத்துகளைக் கைப்பற்றுவதற்கான சதிமுயற்சி! பாஜக அரசின் பெரும்பான்மைவாத ஃபாசிசத்தைக் கண்டித்து ஏப்ரல்- 08 அன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்! அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான வக்ஃபு சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை ! ------------------------------------------------------------------- இஸ்லாமிய அமைப்புகளும் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த போதும் அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக வஃக்பு திருத்தச் சட்டத்தைப் பாசிச பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. நாடாளுமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நள்ளிரவு இரண்டு மணிக்கு மேல் அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை அடிப்படையாகக்கொண்ட மிகவும் அப்பட்டமான ஃபாசிசத் தாக்குதலாகும். அரசமைப்புச் சட்டத்துக்கும் தேசிய ஒருமைபாட்டுக்கும் எதிரான வக்ஃபு திருத்தச் சட்டத்தைக் கண்ட...