ஒரே நாடு ஒரே தேர்தல்

 *ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை முற்றாகத் திரும்பப் பெற வேண்டும்...*



*ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளை சிதைக்கும் மிக மோசமான உள்நோக்கம் கொண்டதாகும்...*

*மாநிலம் சார்ந்த உணர்வுகளை நசுக்குவதும், மாநில உரிமைகளை பறிப்பதும், மாநில கட்சிகளை மெல்ல மெல்ல ஒழிப்பதும், இன்றைய நாடாளுமன்ற ஜனநாயக முறையை ஒழித்து அதிபர் ஆட்சி முறைக்கு மாற்றுவதும் அதன் வழி நாட்டை அரச மதம் கொண்டதொரு மதச் சார்புள்ள தேசமாக கட்டமைப்பதும் தான் பாஜகவினர் இறுதி நோக்கமாகும்...*

*ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததனால் அதனை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பி தற்போதைக்கு ஆர போட்டுள்ளனர். விசிக சார்பில் நமது எதிர்ப்பை பதிவு செய்ய வாய்ப்பு கேட்டும் கிட்டவில்லை. மிகுந்த வேதனை அளிக்கிறது. இதனை முற்றாகத் திரும்பப் பெறவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்...*

*அரசமைப்புச் சட்டத்துக்கு வேட்டுவைக்கும் பாஜகவின் முயற்சியை விசிக சார்பில் மிக வன்மையாக கண்டிக்கிறோம்...*

*தொல்.திருமாவளவன்,*

நிறுவனர் - தலைவர்,விசிக,

நாடாளுமன்ற உறுப்பினர், 

சிதம்பரம்.

Comments

Popular posts from this blog

ரயில்வேயில் பட்டதாரிகளுக்கு வேலை; 5,810 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?

Wauf சட்டம்