Palatina issue

 


பாலஸ்தீன - இஸ்ரேல் போர் முடிவுக்கு வருகிறது? 


இஸ்ரேலுக்கும் - ஹெஸ்புல்லாவுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் உண்டாகியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. காஸாவிலும் பாலஸ்தீனத்திலும் வாழும் மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி இது! 


அமெரிக்க அரசின் மத்தியஸ்தினால் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனினும், இஸ்ரேலில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது உயர் நவீன ரக ஏவுகணைகள் மூலம் ஹெஸ்புல்லா தாக்க ஆரம்பித்ததும், சர்வதேச கிரிமினல் கோர்ட் இஸ்ரேல் அதிபருக்கு அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்ததும் போர் நிறுத்தத்துக்குக் காரணங்களாக அமைந்திருக்கலாம். 


பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை பைடன் அரசு ஊக்குவித்தது. இதுவரை அந்த அநீதியான போரில் சுமார் 2 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இப்போது டிரம்ப் பொறுப்பேற்கவுள்ள நிலையில் காட்சிகள் மாறத் தொடங்கியுள்ளன. 


அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதில் இஸ்ரேல் - பாலஸ்தீனப் போருக்கு முக்கிய பங்கிருக்கிறது. அமெரிக்கா பாலஸ்தீனத்தை அழிக்கத் துணை போனது. அதற்குப் பரிசாக அமெரிக்காவுக்கு டிரம்ப் ஆட்சியைப் பரிசளித்திருக்கிறார்கள் அமெரிக்காவில் வாழும் அராபியர்களும் முஸ்லிம்களும். இதுதான் வரலாற்றின் நகைமுரண்!

Comments

Popular posts from this blog

ரயில்வேயில் பட்டதாரிகளுக்கு வேலை; 5,810 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?

Wauf சட்டம்

ஒரே நாடு ஒரே தேர்தல்