அணு கனிமம் வேல்முருகன்

 கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கத்தை அமைக்க பாசிச மோடி அரசு திட்டம் : கார்ப்பரேட் கும்பலுக்கு சேவகம் செய்யும் ஒன்றிய அரசின் நாசக்காரத் திட்டங்களை தடுத்து நிறுத்துக!



மதுரை அரிட்டாபட்டியில் வேதாந்தாவின் டங்ஸ்டன் சுரங்கத்தை அமைக்க விடமாட்டோம் என தமிழ்நாடு அரசு உறுதியாக தெரிவித்திருப்பது வரவேற்கதக்கது; பாராட்டுக்குரியது.


குறிப்பாக, முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் அமையாது; இதையும் தாண்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் வந்தால் முதல்வர் பதவியில் இருக்கமாட்டேன் என்று தமிழ்நாடு மாண்புமிகு முதல்வர் அவர்கள் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க பாசிச மோடி அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த நாசக்காரத் திட்டத்திற்காக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த முயன்றது. பின்னர், மக்கள் எதிர்ப்பினால் அக்கருத்துக் கேட்பு கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


அதாவது, கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரையடுத்த கீழ்மிடாலம், மிடாலம், இணையம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் 1,144 ஏக்கர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கத்தை அமைக்க பாசிச மோடி அரசு திட்டமிட்டுள்ளது.


மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் ஒன்றிய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான மூலப்பொருட்களை சூறையாடும் நோக்கத்துடனே இந்தச் சுரங்கத்தை அமைக்க மோடி அரசு முடிவு செய்திருக்கிறது.


இதேபோன்று, கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து தென்மேற்காக 50 நாட்டிக்கல் மைல் தொலைவில் அமைந்துள்ள படுகைக் கரையில்  32,485 சதுர கி.மீ. பரப்பளவுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க பாசிச மோடி அரசு ஏலம் விட்டுள்ளது.


குறிப்பிடப்பட்டுள்ள அப்பகுதி, சுமார் 200 வகையான மீன்கள் வாழும் இப்பகுதியானது மீன்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.  இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், மீன் இனங்கள் முற்றிலும் அழிந்து,  மீனவர்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படும். இந்த இரு நாசகரத் திட்டங்களையும் செயல்படுத்த மோடி அரசு முனைப்புக் காட்டுகிறது.


குறிப்பாக, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த இயற்கை வளங்களை அழித்து, மண்ணுக்கடியில் புதைந்திருக்கும் கனிம வளங்களையும், எரிப்பொருட்களையும், கொள்ளை அடிக்கும் அம்பானி-அதானி-அகர்வால் கார்ப்பரேட் கும்பலுக்கு தாரை வார்க்க பாசிச மோடி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.


காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, உலக நாடுகளெல்லாம், சுற்றுச்சூழலுக்கு எதிரான ஆலைகளையும், சுரங்கங்களையும் மூடி வருகிறது.


ஆனால், காலநிலை மாற்றத்தை கருத்தில் கொள்ளாமல், மதுரையில் டங்கஸ்டன் சுரங்கம், கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம், எண்ணெய் மற்றும் எரிவாயு, தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி பகுதியில் மீன்கழிவு ஆலை, திருவண்ணாமலை மாவட்டம் மேல்மாவில் சிப்காட்,  எண்ணூரில் புதிய அனல் மின் நிலையம், பரந்தூர் விமானநிலையம் உள்ளிட்ட நாசக்காரத்திட்டங்களை, மோடி அரசு நடைமுறைப்படுத்தினால், தமிழ்நாடு பாலைவனமாகும் ; தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அகதிகளாவார்கள்.


எனவே, தமிழ்நாட்டில் அம்பானி-அதானி-அகர்வால் கார்ப்பரேட் கும்பல்களுக்கு சேவகம் செய்யும் பாசிச மோடி அரசின் சூழ்ச்சியை முறியடித்து, நாசக்காரத் திட்டங்களை தடுத்து நிறுத்த, தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

Comments

Popular posts from this blog

ரயில்வேயில் பட்டதாரிகளுக்கு வேலை; 5,810 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?

Wauf சட்டம்

ஒரே நாடு ஒரே தேர்தல்